திருமணமாகி குடும்பம் நடத்தும் ஒரு பெண், 17 வயது சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறி 32 வயது பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகைகுளத்தைச் சேர்ந்த காளீஸ்வரி, திருமணமானவர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதிக்கு 8 வயது மகனும் உள்ளார். கணவர் இல்லாத தனிமையில் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, தேவநல்லூர் பகுதியில் உள்ள பன்றி பண்ணையில் வேலை செய்துவரும் பள்ளி கல்வி முடித்த 17 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்தியுள்ளார். பழக்கம் சின்னதாகத் தொடங்கி, நாட்கள் செல்ல செல்ல அதுவே நேரடி தொடர்பாக மாறியிருக்கிறது. சிறுவனும், குடும்ப சூழ்நிலை காரணமாக மேல்படிப்பு தொடராமல் வேலைக்கு சென்று வந்த சூழ்நிலையில், தனது ஓய்வு நேரங்களில் காளீஸ்வரியுடன் தொடர் உரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இருவரும் பலமுறை பன்றி பண்ணையில் யாரும் இல்லாத வேளையில் சந்தித்து நெருக்கத்தை அதிகரித்துள்ளனர். இதையடுத்து, கடந்த இரு மாதங்களுக்கு முன் காளீஸ்வரி, சிறுவனை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று களக்காடு பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, அங்கும் தங்கியுள்ளார். இது வழக்கமான உறவின் எல்லைகளை மீறி, சிறுவனின் உடல் மற்றும் மனநலத்திற்கே பாதிப்பாக இருக்கக்கூடிய நிலைக்கு சென்றிருக்கிறது என்று சிறுவனின் தாயார் கூறுகிறார். சிறுவனின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு, காளீஸ்வரியை “போக்சோ” சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அதன் பின்னர் காளீஸ்வரியை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்துள்ளனர்.