பெங்களூர்: பெங்களூரில் உள்ள கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில் செய்ய இடம் இல்லாத காரணத்தால் சென்னைக்கு விமானங்களை திருப்பி உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் அவசியம் தேவைப்பட்டது. கர்நாடக அரசு இந்த வேலைகளில் கடந்த சில மாதங்களாக ஆர்வம் காட்டி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வுகள் நடத்தப்பட்டது.
கனகபுரா ரோடு இரண்டு இடங்கள், நீலமங்கல, குனிக்கல் ரோட்டில் ஒரு இடங்கள் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. துமக்குருவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. மறுபுறம் ரியல் எஸ்டேட் விவகாரம் சூடு பிடித்துள்ளது.
புதிய விமான நிலையத்தை ஒட்டி இடம் வாங்கினால் வரும் ஆண்டுகளில் பல மடங்காக விற்பனையாகும் என மக்கள் இடங்களை வாங்குவதற்காக ஆர்வம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் கூறுகையில், பெங்களூரு திண்டுக்கல் இடையிலான நெடுஞ்சாலை 209 இரட்டை வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் இன்னும் சில நாட்களில் நல்ல வளர்ச்சி அடையும்.
கனகபுரா, மலவல்லி, சாம்ராஜ்நகர் மற்றும் கொல்லேகல் வழியாக வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது. இதனை ஒட்டி நிலம் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என கூறியுள்ளனர். கனகபுரம் ரோட்டில் சதுர அடி அப்பார்ட்மெண்ட் இன் விலை 10 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
ஒரு சதுர அடி பிளாட் விலை 15 ஆயிரம் ரூபாய். நீலமங்கலா ரோட்டில் சதுர அடி அப்பார்ட்மெண்ட் விலை 6000 வரையும், ஒரு சதுர அடி பிளாட் விலை 5000 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. மேலும் குனிகள் ரோட்டில் ஒரு சதுர அடி பிளாட் 3000 வரையும், ஒரு சதுர அடி அப்பார்ட்மெண்டின் விலை 4000 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் ஐந்து முதல் 15 சதவீதம் வரை நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கோடிக்கு விற்கப்பட்ட நிலங்கள் தற்போது 8 கோடிக்கு மேல் விற்பனையாகிறது. பெங்களூரு இரண்டாவது விமான நிலையத்திற்கு இடம் அறிவிக்கப்பட்டால் ரயில் சேவை இணைப்பு கிடைத்துவிடும் மேலும் போக்குவரத்து வசதிகளும் எளிதாகிவிடும் என்ற காரணத்தினால் ரியல் எஸ்டேட் சூடு பிடித்துள்ளது.