ஆந்திர மாநிலத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீஹரிகோட்டாவில் ஆயிரம் டன் கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான மூன்றாவது தளம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிருக்கிறது.
இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்திருப்பதாவது :-
இந்தியா விண்வெளி ஆய்வு மையமான ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டமானது மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.
புதிதாக உருவாக்கப்பட இருக்கும் மூன்றாவது ஏவு தளத்தின் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் இருந்து பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது தற்பொழுது 3,984.86 கோடி ரூபாயில் துவங்க இருப்பதாகவும், இதற்கான பணிக்காலம் 4 ஆண்டுகள் வரை இருக்கும் எனவும் இந்திய விண்வெளி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவது தளமானது 1000 டன் எடை கொண்டு 90 மீட்டர் உயரம் வரை இருக்கும் எனவும் இதன் மூலம் 1000 டன் எடை கொண்ட ராக்கெட் களை செலுத்த இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கக்கூடிய இரண்டு ஏவு தலங்களும் ஆயிரம் டன் எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாது என்பதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்பொழுது இது போன்ற மிகப்பெரிய ஏவுதளத்தை உருவாக்க இருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறார்.