விமானங்களின் இறக்கைகள் உரசியதால் 4 விமானிகள் நீக்கம்!! பயணிகள் மீட்பு! 

4 pilots fired due to wing friction!!
ஹனோய்: வியட்நாம் தலைநகர் ஹனோயில் நொய்ப்பாய் விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் மோதி கொண்டதனால் 4 விமானிகளை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது நிறுவனம். வியட்நாம் நகரின் ஹனோயில் நொய் பாய் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் பரபரப்பு விமான நிலையங்களில் ஹனோயில் விமான நிலையமும் ஒன்று.
ஏ 321 என்ற விமானம் அணுவில் நோய் பாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. அப்போது வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நின்று கொண்டிருந்தது. மேலும் ஹோ சி மின் நகரத்திற்கு புறப்பட வியட்நாம் நிறுவனத்தின் விமானம் நின்றிருந்த நிலையில் எ 321 விமான இறக்கைகளின் மீது உரசியது.
விமானத்தின் இறக்கைகள் சேதமடைந்துள்ளது. விமானங்களின் இறக்கைகள் சேதமடைந்ததால் இரு விமானங்களிலும் இருந்த 386 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இறக்கைகள் சேதமடைந்தது அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான இறக்கைகள் சேதமடைந்தது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏ 321 என்ற விமானம் ஓடு பாதையில் சரியாக நிறுத்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து நான்கு விமானிகளை பணியிடம் நீக்கம் செய்துள்ளது. உடனடியாக நான்கு விமானிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram