சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திக்க பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜய் 42 நாட்கள் தொடர்ந்து சந்திப்பு பயணம் மேற்கொள்வதாக வெளியாகிய தகவலின் படி ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஜூலை இரண்டாவது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பயணம் தொடங்கலாம் என எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்தப் பயணமானது மதுரை அல்லது திருச்சியில் இருந்து தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பத்து மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மக்களை ஈர்க்கும் வகையில் களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில் நடிகர் விஜய் புதிதாக களம் இறங்க உள்ள நிலையில் 42 நாட்கள் மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சில கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில கட்சிகள் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. நடிப்பதை ஓரம் கட்டி கட்சியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார் நடிகர் விஜய். அதன்படி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்ற நிலையில்,தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
ஜூலை 2 வது வாரத்தில் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சந்திப்பை நடிகர் விஜய் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிரச்சார வாகனம் தயார் நிலையில் இருப்பதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு ஆதரவு இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் பெரியவர்கள் ஆதரவை பெறவும் இந்த வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த மாவட்டத்தில் விஜய் என்னென்ன பேச வேண்டும் என்பதற்கு தனிக்குழு அமைத்து உரைகளை வடிவமைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. கட்சி நிர்வாகிகளிடையே எந்த கோஷ்டி பூசலும் இருக்கக் கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.