காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலி பெண்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு பிறகு பெண்களின் சுதந்திரம் முழுவதும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி சம்பவமான ஆறு வயது சிறுமியை 45 வயது ஆப்கானிஸ்தான் நபர் திருமணம் செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் பெண்கள் வெளியே செல்லக்கூடாது என்றும், வேலைக்கு போகக்கூடாது என்றும் ஆண்களின் துணையுடன் தான் வர வேண்டும் என்று தாலிபன்கள் உத்தரவிட்டுள்ளனர். பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல்கள் வைக்க கூடாது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர்.
நல்லொழுக்கத்தை கடைபிடிக்க இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது என காரணங்களை கூறினாலும் உலக நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். மர்ஜியா மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் தனது மகளை கடன் பிரச்சனையால் 45 வயதுடைய நபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
45 வயதுடைய நபருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ஆறு வயது சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பின் குழந்தையின் அப்பாவிற்கு பணம் கொடுத்து உதவி உள்ளார் அந்த நபர்.
பணத்திற்காக 45 வயதுடைய நபருக்கு பெற்ற மகளையே விற்றுள்ளார். தலிபான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்த நிலையில் சிறுமிக்கு ஆறு வயது ஆகிறது என கேட்டதற்கு 9 வயது ஆகும் வரை அவரை காத்திருக்கும் படி அறிவுறுத்தியுள்ளோம் என்று பெற்றோர் வீட்டில் விட்டு வந்துள்ளனர்.
பெண் மணமகன் மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து செய்தியை அமெரிக்காவில் உள்ள மீடியா ஒன்றில் வெளியிட்ட பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் கண்டிக்கத்தக்க சம்பவமாக மாறி உள்ளது.