50 வயதில் அடுக்குமாடி விபசார விடுதி!! கையும் களவுமாக சிக்கியது எப்படி??

50-year-old woman who ran a brothel

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சமீப காலமாக நடந்து வரும் மசாஜ் சென்டர்கள் ஸ்பா மற்றும் சலூன்கள் விபச்சாரம் அதிகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை அவ்வப்போது அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடந்ததாக காவல்துறை தகவல் கிடைத்தது. மேலும் தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் ஸ்பா மசாஜ் சென்டர்கள் முறையான அனுமதி வாங்காமல் நடத்தி கொண்டு வருகின்றனர்.

மேலும் நடத்துவதற்கான லைசென்ஸ்கள் முறையாக புதுப்பிக்கப்படுவதில்லை. அதுபோல அந்த 50 வயது பெண் தனியாக இருக்கும் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக சொல்லி மற்றும் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவர்களை பாலியல் தொழில் ஈடுபட வைத்துள்ளார். இதில் அதிகமாக வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை கம்பெனி வேலைக்கு என்று கூட்டி வந்து  மசாஜ் சென்டர்களில் குறிப்பிட்ட தொகைக்கு பெண்களை அடமானம் வைத்து விட்டு செல்கின்றன சில பெண் புரோக்கர்கள் அவர்களும் குடும்ப வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் கைது செய்யப்பட்ட பெண்களை பத்திரமாக  அவரவர் ஊர்களுக்கு காவல்துறை அனுப்பி வைக்கப்படுகின்றன. காவல்துறை அதிரடி சோதனையில் சென்னை கீழ்பாக்கத்தில் ஒரு வணிக வளாகத்தில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று சோதனை செய்த போது பாலியல் தொழில் நடப்பது உறுதியானது இதைத் தொடர்ந்து என் உரிமையாளரான விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஒன்பது பெண்களையும் மீட்டு அனுப்பி வைத்தனர்.

மேலும் விருகம்பாக்கம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கேயும் சோதனை மேற்கொண்டனர் அங்கு சாய்பாபா காலனி மூன்றாவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு 50 வயது மதிக்கத்தக்க மூதாட்டி  பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொழிலை செய்து வந்த ராஜேந்திரன் மனைவி லதா வை காவல்துறை கைது செய்து  சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் செல்போன் மற்றும் சில தகவல்களை போலீசார் கைப்பற்றினர். பின்பு மீட்கப்பட்ட பெண்களை  அரசு மகளிர் காப்பகத்தில் கொண்டு சென்று விடப்பட்டனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram