யோகா தின நிகழ்ச்சி!! 23 வயதில் 51 தண்டால் எடுத்து வியக்க வைத்த ஆளுநர்!!

51 took the shaft and surprised

மதுரை: பதினோராவது சர்வதேச யோகா தினம் இன்று உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் மதுரையில் நடந்த யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது யோகா தினத்திற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்தாயிரம் மாணவர்களுடன் கலந்து கொண்டு ஆர் என் ரவி இடைவிடாமல் 51 தண்டால் எடுத்து அனைவரையும் வியக்கச் செய்தார்.

இந்தியா மட்டுமின்றி 177 உலக நாடுகளிலும் யோகா தினத்தை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மாணவ மாணவியர் யோகா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி மதுரையில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டார்.

பத்தாயிரம் மாணவர்களுக்கு மத்தியில் ஆளுநர் சிறப்பு விருந்தினராக யோகா தினத்தை கொண்டாடினார். யோகா தினத்தை ஒட்டி யோகா உடையில் வருகை தந்தார். வழக்கமாக ஆளுநர் கோட் சூட் அணிந்திருப்பது தவிர்த்து டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இடைவிடாமல் 51 தண்டால்கள் எடுத்து ஆளுநர் ஆர் என் ரவி அனைவரையும் வியக்கச் செய்தார்.

மாணவர்கள் கைத்தட்டி பார்த்து ரசித்தனர். 73 வயது ஆகும் நிலையில் இடைவிடாமல் 51 தண்டல்கள் எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வயது என்பது வெறும் எண் மட்டுமே என்று நிரூபித்துக் காட்டி உள்ளார் ஆர் என் ரவி என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றன

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram