தமிழ்நாடு அரசின் நிர்வாக கட்டமைப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகளில் புதிய கலெக்டர்களும் ஆணையர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
முக்கிய நியமனங்கள்:
ராஜேந்திர ரத்னூ தமிழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷில்பா பிரபாகர் சதீஷ் – வணிகவரி.
மற்றும் பதிவுத்துறை செயலாளர்
சங்கர் – உயர் கல்வித் துறை செயலாளர்.
வள்ளலார் – சமூக சீர்திருத்தத் துறை செயலாளர்
சமயமூர்த்தி – மனிதவள மேலாண்மைத் துறை
விஜயகுமார் – நில சீர்திருத்த ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களின் மாற்றங்கள்:
திருச்சி – வெ. சரவணன், மதுரை – கே.ஜே. பிரவீன் குமார், விருதுநகர் – என்.ஓ. சுபபுத்ரா, சிவகங்கை – கா. பொற்கொடி, செங்கல்பட்டு – தி. சினேகா, ஈரோடு – ச. கந்தசாமி, நாமக்கல் – துர்கா மூர்த்தி, திருப்பூர் – நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவ்,
பெரம்பலூர் – அருண்ராஜ்.
மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்:
திருச்சி மாநகராட்சிக்கு – வி. மதுபாலன், திருப்பூர் – எம்.பி. அமித்,
நெல்லை – மோனிகா ராணா, தூத்துக்குடி – பானோத் ம்ருகேந்தர் லால், ஆவடி – ரா. சரண்யா
முக்கிய நகராட்சி மற்றும் நிர்வாக பதவிகள்:
கோ.பிரகாஷ் – சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர்.
நாகராஜன் – வணிக வரி ஆணையர்.
சு.சிவராசு, ஜெ.விஜயராணி, தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி திட்டங்களில் தலைமைப் பொறுப்பேற்கின்றனர்.
மாற்றத்தின் பின்னணி:
இந்த மாற்றங்கள் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், அனுபவமிக்க அதிகாரிகளை முக்கிய பகுதிகளுக்கு நியமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.