6 வயது சிறுமிக்கு 14 வயது சகோதரனால் நேர்ந்த கொடூரம்!! போக்சோவில் கைதான பின்னணி??

குஜராத்தின் ஜெத்பூர் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அப்பகுதியில் கடும் கவலை நிலவுகிறது.

ஜெத்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 14 வயது சிறுவன், தனது 6 வயது உறவுக்கார தங்கச்சி சிறுமியை விளையாட போகலாம் எனக் கூறி வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறுமி மீது பாலியல் வன்முறை நடந்துள்ளது. அச்சத்தால் அந்த சிறுமி உடனே இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

சில நாட்கள் கழித்து சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது சிறுமி உணவு உட்கொள்ள முடியாமல் தவித்ததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்முறை நடந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, 14 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன் அதே பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டாரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஜிதேந்திரா என்ற நபர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே பகுதியில் குறுகிய காலத்தில் இரண்டு சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram