ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள பாக்னா கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க மனு என்பவர். குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்த இவர் கடந்த 28ஆம் தேதி எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர்.
குப்பை பொறுக்கும் வேலைக்காக கிராமங்களின் சந்துகள் என அனைத்து இடங்களிலும் வேலை செய்து வந்துள்ளார். குப்பை பொறுக்குபவர் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை. நல்லவர் போல சிறுமிகளிடம் இனிப்புகள் அல்லது பரிசுகளை கொடுத்து நம்பிக்கையை பெற்றுள்ளார்.
பின்னடைவில் பலாத்காரத்திற்காக கவர்வதற்கே இனிப்புகளை வழங்கி உள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. சிறுமிகளின் விவகாரத்தில் ரேப்பிஸ்ட்டாக செயல்பட்டுள்ளார். பிரேத பரிசோதனையின் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
விசாரணையில் சிசிடிவியின் காட்சிகளின் அடிப்படையில் கொண்டு மனு என்பவர் கண்டறியப்பட்டது. கிராமவாசிகள் அடையாளம் காட்டியதால் அவரை தேடத் தொடங்கினர் போலீசார். மேலும், அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ 1 லட்சம் என போலீஸ் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று அவரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
துப்பாக்கி முனையில் வளைத்த போலீசாரை நோக்கி மனு, துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தும் போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் மனு பலியானார். இந்த தாக்குதலில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏற்று ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் கை துப்பாக்கி, வெடிப்பொருள், ஏடிஎம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். மனு மீது பாலியல் வழக்கு மட்டுமல்லாது பல்வேறு வழக்குகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட எட்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
ஜூன் 3ம் தேதி சிறுமியின் உறவினர்கள் சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து தேடப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டறியப்பட்டது. குப்பை பொறுக்குபவரிடம் கை துப்பாக்கி,வெடிபொருட்கள் எவ்வாறு வந்தது? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.