Cricket : இன்று தொடங்கிய ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம்.
பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் சில நான்கு அணிகள் உள்ளன. இதில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணி அரவிந்த் செல்லும் வாய்ப்பு இருந்து வெளியேறியது.
குரூப் பி அட்டவணையில் தென் ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் என நான்கு அணிகள் உள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணி இடையிலான போட்டி இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து களம் இறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய குர்பாஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கையினை ஜோடியாக களம் இறங்க இப்ராகிம் சத்ரான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து பவுலர்களை திணறு செய்தார்.
இவர் 146 பந்துகளை எதிர் கொண்டு 177 ரன்கள் சேர்த்தார். இதில் 12 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கும். மேலும் ஹஸ்மதுல்லா ஷாகிதி 40 ரன்கள், ஹஸ்மதுல்லா ஓமர்சாய் 41 ரன்களும், முகமது நபி 40 ரன்களும் சேர்த்து ஆட்டம் முடிவில் அணியின் எண்ணிக்கை 325 ஆக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.