பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள சிர்சி அருகிலுள்ள சோமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திர கேசவ் ஹெக்டே. இவருக்கு சொந்தமாக பண்ணை தோட்டம் உள்ளது. ஹாவேரி மாவட்டம் ஓசகித்தூர் கிராமத்திற்கு அருகே உள்ள திப்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உடன் தங்கி வேலை பார்த்து வருகின்றார்கள்.
முதல் மகன் 9 வயது, இரண்டாவது மகன் 7 வயது என இரண்டு மகன்கள் உள்ளன. ராகவேந்திராவின் தோட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் அவற்றை விரட்டுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் தம்பதிகள் வேலை செய்து கொண்டிருந்தபோது இரண்டு மகன்களும் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நாட்டு துப்பாக்கி வைத்திருந்த அறையை தொழிலாளி ஒருவர் திறந்து வைத்துள்ளார். துப்பாக்கிகளில் குண்டுகளை வைத்து விட்டு வேலை செய்து கொண்டிருந்தார் தொழிலாளி. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டாக துப்பாக்கிகளை எடுத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது போல் விளையாட்டாக இரண்டாவது மகன் மூத்த மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறியதால் 9 வயது சிறுவன் வயிற்றில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து ராகவேந்திராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் போலீசர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . உரிய பாதுகாப்பு இன்றி துப்பாக்கிகளை வைத்திருந்ததால் தோட்ட உரிமையாளர் ராகவேந்திராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.