லண்டன்: 900 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடை வைத்து தொழில்நுட்பத்தின் மூலம் பெண்ணின் முகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள். இங்கிலாந்தின் கெண்டல் நகரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள் தொடங்கப்பட்டது. நீர் மேலாண்மை பணிகள் தொடங்கப்பட்ட போது அங்குள்ள தேவாலயம் அருகில் சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.
எலும்பு கூடுகளை கைப்பற்றி தொல்லியல் துறைகளும் அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொல்லியல் துறை நடத்திய ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 900 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்பது உறுதியானது. மேலும் எலும்பு கூடில் உள்ள மண்டை ஓடு பெண்ணின் மண்டை ஓடு என்று தெரிவிக்கப்பட்டது. தேவாலயம் அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மறு கட்டமைப்புக்கு ஏற்றவாறு இருந்ததாக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறினர். இதனை ஆராய லிவர்பூல் ஜார் மூர்ஸ் பல்கலைக்கழகம் முன் வந்தது.
எலும்புக்கூடு வைத்து லிவர்பூல் ஜார் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அந்தப் பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கும்? என தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட அப்பெண்ணின் முகம் கொண்ட எலும்புக்கூடு தற்போது கெண்டல் தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


