சென்னை: சென்னையில் நடந்த போக்குவரத்து துறை ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சில் ஓய்வூதியர்களுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. .இதில் கடும் கோபம் அடைந்த போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சில் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உயர்வு வழங்க வேண்டும் என ஒன்பது கோரிக்கைகள் அமைச்சரிடம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைத்தனர்.
அந்த ஒப்பந்தத்தில் உள்ள அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை அமைச்சர் நிராகரித்துவிட்டார். இதனால், போக்குவரத்து துறை ஊழியர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமல் வெளிநடப்பு செய்தனர். மன உளைச்சலுக்கு ஆன போக்குவரத்து துறை ஊழியர்கள் போராட்டத்தை கையில்எடுக்க உள்ளனர்.
புதிய ஓய்வூதிய ஒப்பந்தத்தின் மூலம் தங்களது வேண்டுகோளுக்கு தீர்வு கிடைக்கும் என இருந்த ஓய்வூதியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட சலுகைகள் படி சம்பள உயர்வு மற்றும் பண்டிகைக்கால முன்பணம் போன்றவை உயர்த்தும் வகையில் சில நலத்திட்டங்கள் செயல்படுத்த உள்ளது. வருகிற ஜூலை மாதம் போராட்டம் நடத்த உள்ளதாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் தலைவர் கதிரேசன் கூறினார்.
93,000 ஓய்வூதியர்கள் ஏமாறும்படி தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டது. புதிய ஊதிய ஒப்பந்தப்படி போக்குவரத்து கழகம் சார்பில் ஓய்வூதியர் நல சார்பில் கோரிக்கைகளை வைக்கப்பட்ட நிலையில்,அவை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக முடிவு செய்துள்ளனர்.