ட்ரூஸ்: சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். திடீரென நடத்திய இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் புதன்கிழமை சிரியாவின் டமாஸ்கஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வான்வெளி தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். தெற்கு பகுதியில் குவிக்கப்பட்ட படைகள் மீது திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டன.
சிரியாவில் சிறுபான்மையினராக உள்ள டூர்ஸ் மக்களை பாதுகாப்பதற்காக வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டன. இதுகுறித்து இஸ்ரேல் கூறுகையில் ட்ரூஸ் மக்களை பாதுகாக்க தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெற்கு பகுதியில் இருந்து அரசின் படைகள் வாபஸ் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் குறித்த தகவல்களை துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பாரக் உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் துருக்கி ஜோர்டான் மற்றும் அண்டை நாடுகள் உள்ளன.
ஸ்வெய்டா மாகாணத்தில் சிரியாவின் படையினர் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் கனடாவில் உள்ள சிரியா தூதரகம் அறிவுறுத்தலின்படி உடனடியாக எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.