நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரின் தலைநகரான நியாமியில் அமைந்துள்ள டாஸோ பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்கள் மீது கடந்த 15 ஆம் தேதி திடீரென பயங்கரவாத தாக்குதல் நடந்தது.
தாக்குதலின் போது பதிலடி கொடுக்கும் விதத்தில் ராணுவ வீரர்கள் களத்தில் இறங்கிய போது 20 தரப்பினருக்கும் கடுமையான தாக்குதல் மூண்டது. பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவரை பயங்கரவாதிகள் பிடித்து சென்றுள்ளன.
இது தொடர்பாக நைஜரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியின் படி, செல்லப்பட்ட இந்தியரை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயிரிழந்த இருவரின் சடலங்கள் சொந்த ஊரான இந்தியாவிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நைஜரில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நைஜர் நாட்டில் மசூதியின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 44 பேர் பலியாகினர். மசூதி ஒன்றில் இறை வணக்கத்திற்கு முஸ்லிம்கள் பலர் ஒன்று கூடி இருந்த வேலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது 44 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரை பிணைக்கைதியாக கடத்தி சென்றுள்ளனர்.
பயங்கரவாதிகள் கடத்தி சென்று இந்தியரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நைஜரின் இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.