புதுடெல்லி: சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி தற்போது சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில் வெளியுறவுத்துறை மற்றும் மத்திய உள்துறை ஆகிய அமைச்சகங்களில் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
24 சதவீத பங்குகள் வரை வாங்க எந்தவித ஒப்புதல் வாங்க தேவையில்லை என நிதி ஆயோக் விதிகளை தளர்த்துமாறு பரிந்துரை செய்துள்ளது. இதனால் கணிசமான ஒப்பந்தங்கள் கால தாமதம் ஆவதை நிதி ஆயோக் அமைப்பு கருதுகிறது.
எனவே சீன நிறுவனங்கள் இந்தியா கம்பெனிகளில் 24 சதவீத பங்குகள் வரை எந்தவித ஒப்புதல் வாங்க தேவையில்லை என்ற விதியை தளர்த்துமாறு மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. தற்போது பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசின் முக்கிய நிர்வாக துறையின் கீழ் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி ஆயோக் இதற்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்ட சில விதிகளை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதி ஆயோக் சீனா நிறுவனங்கள் இந்திய கம்பெனிகளில் முதலீடு செய்யும் 24% பங்குகள் வரை ஒப்புதல்கள் வாங்க தேவையில்லை என்ற விதிகளை தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.