Instagram செயலி மூலம் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு வசதியாக புதிய சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாகிராம் செயலியானது கடந்த 2010ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் புகைப்படங்கள் மற்றும் பதிவிடும் வகையில் செயல்பட்டு வந்த பின் நாளடைவில் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட தொடங்கி ரீல்ஸ் வரை தற்போது பிரபலமாக உள்ளது. தற்போது வரை உலக அளவில் மாதம் தோறும் சுமார் ஒரு பில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் கொண்டுள்ளது.
Instagram தளத்தில் பயணர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக புதுப்புது அப்டேட்டுகளை கொண்டு வருகிறது மெட்டா நிறுவனம். அந்த வகையில் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கேன ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஆட்டோ ரீல்ஸ் என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் ரீல்ஸ் பார்க்க ஸ்க்ரோல் செய்ய அவசியம் இல்லை. அவர்களுக்கே என புதிய அம்சமான சில பீட்டா பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கொண்டு வந்துள்ளது. ரீல்ஸ் பட்டனை கிளிக் செய்த பின் ஆட்டோ ரீல்ஸ் ஆன் என கொடுத்தால் போதும் தானாக ரீல்ஸ் முடிந்தவுடன் அடுத்தடுத்து ரீல்ஸ்கள் தொடங்கிவிடும்.
மற்ற வேலைகளை செய்து கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு என தனியாக புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. தற்போது ஐ போன் பயனர்களுக்கு மட்டும் இந்த பீட்டா வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இன்ஸ்டாகிராமில் இந்த அப்டேட் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.