சென்னை: நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி மத்திய மேற்கு வட மேற்கு வங்க கடல் பகுதிகள் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 29ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய இந்த மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று ( 24/07/2025, வியாழக்கிழமை) தென்காசி தேனி நீலகிரி மற்றும் கோவை மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை ( 25/07/2025) கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் கனமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. மேலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் உருவெடுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.