ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் இன்று காலை பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பொப்லொடி பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் வழக்கம் போல் மாணவ, மாணவியர் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.
இன்று காலை சுமார் 8 45 மணி அளவில் அரசு பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து உள்ளது. இதில் பள்ளி வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். உடனடியாக மீட்புக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் கிராம மக்கள் விரைந்து பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த இடுப்பாடுகள் சிக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு காப்பாற்ற முயற்சி செய்தனர். மேலும், இந்த இடிபாடுகளில் சிக்கி 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 17 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களில் நான்கு பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.