சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை. இது கிட்னி முறைகேடு என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து சிறுநீரகத்தைப் பெற்று விற்பனை நடந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மருத்துவத் திட்ட பணிகள் இயக்குனர் வினித் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தக் குழு நடத்திய விசாரணையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக போலி சான்றிதழ் வழங்கியது அம்பலமானது. இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மா சுப்பிரமணியன் எழுப்பிய கேள்விகளுக்கு, தனலட்சுமி சீனிவாசன் மற்றும் திருச்சி சீதா ஆகிய 2 தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதித்துள்ளது.
மேலும், அதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மனித உறுப்புகள் மற்றும் கிட்னி ஆகியவற்றை திருடுகிறார்கள் என்று பேசி வந்த நிலையில் திருட்டா அல்லது முறைகேடா என்பதை விசாரித்து வருகின்றனர் அதிகாரிகள். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் கிட்னி மற்றும் இதர உறுப்புகளை எடுத்தால் அது திருட்டு. ஆனால் இங்கு நடந்தது முறைகேடு.
இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற வருகிறது. காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து சி எஸ் ஆர் நகல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டாலும் சுகாதார துறை சார்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையின் அடிப்படையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 வார கால விசாரணை முடிந்து அறிக்கை வந்தபின் காவல்துறை மூலம் மற்றும் துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனைகளில் மனித உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய பல்வேறு விதிகளை கொண்டு வர வேண்டும்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இடை தரகர்கள் யார் மற்றும் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.