சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்த நிலையில் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆவியா பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரு சில இடங்களில் பலத்த சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மழை பகுதிகள், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் தேனி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(நாளை) ஜூலை 27 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஆகிய ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜூலை 28ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மேனன் கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 29 தமிழகத்தில் ஒரு சில இடங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூலை 30 மற்றும் 31 ஆம் தேதியில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.