மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு வயது பெண் குழந்தை 12 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 4 வயது அன்விகா பிரஜாபதி என்ற பெண் குழந்தை உள்ளார்.
சம்பவத்தன்று நவ்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து குழந்தையுடன் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். சுட்டித்தனமாக விளையாடிக் கொண்டிருந்த அன்விகா பெரியவர்களின் காலணி தனது கால்களில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது தாயார் விளையாடிக் கொண்டிருந்த மகளைக் கண்டு ஓர் இடத்தில் அமைதியாக அமரும்படி காலணிகளின் பெட்டியின் மேல் அமர வைத்துள்ளார். அருகிலிருந்த ஜன்னலில் கம்பிகளை எதுவும் இல்லாமல் பாதுகாப்பற்று இருந்த நிலையில் 12 வது மாடியில் இருந்து தவறி விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த புதன்கிழமை மாலை 8 மணி அளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் காண்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்றபோதும் எந்த பலனும் இன்றி குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.