குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலகியதால் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டு நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்ற திருச்சி கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் இரவே திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலைகள் உடல்நல பிரச்சனையால் பதவி விலகுவதாக திரு ஜெகதீப் தன்கர் கூறினாலும், அவருக்கும் பிரதமருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து கேள்வி எழுப்பி உள்ள உள்ள நிலையில் பிரதமருக்கும் திரு ஜக்கித்தங்கர் இருக்கும் இடையே என்ன நடந்தது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநிலம் விஜயபுராவில் செய்தியாளர் கிட்ட பேசியவர், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் போது அரசுக்கு ஆதரவாகவே திரு ஜெகதீப் தன்கர் செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில் ஜெகதீப் தன்கர் எப்போதும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவார். என்ன நடந்தது என்பதை அவர் கூற வேண்டும். விவசாயிகள் ஏழைகளின் பிரச்சனைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவை குறித்து அவையில் விவாதிக்க அனுமதிக்கப்பட்டார். நோட்டீஸ் கொடுத்தாலும் பெண்கள் பட்டியலின மக்கள் இந்து முஸ்லிம் விவகாரம் குறித்து பேச அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே என்ன நடந்தது? ஏன் ராஜினாமா செய்தார்? என்பது குறித்து அவரும், மோடியும் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதமர் மோடியிடம் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்தை கூறியதால் தான் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. இதில் டிரம்பின் தலையீடு குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்படும் என்பதால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஆகியோர் பதிலளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் நாளை மாநிலங்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.


