வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாண மேன் ஹாட்டன் நகரில் பார்க் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள 44 மாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பல்வேறு முக்கிய நிதி நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் கால்பந்து லீக்கின் முக்கிய அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது.
இந்நிலையில் கட்டிடத்திற்கு புகுந்த மர்ம நபர் அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 6 மணி அளவில் துப்பாக்கியுடன் சரமாரியான துப்பாக்கிச்சூடு நடத்தினார். அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்த மக்கள் மீது சரமாரியான தாக்குதலை நடத்தினார்.
துப்பாக்கி சூட்டில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய பிறகு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மர்ம நபர் மற்றும் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். அங்கிருந்த பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். அருகில் உள்ள மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்கள் கொண்டு செல்கின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியது குறித்தும் , துப்பாக்கி சூட்டிற்கான காரணமாக இருந்த மர்ம நபர் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது துப்பாக்கி நடத்தி விட்டு தன்னை தானே தற்கொலை செய்து கொண்ட நபர் நெவாடா மாகாணத்தை சேர்ந்த ஷேன் தம்ரா என்பது தெரிய வந்தது. மேலும், துப்பாக்கி சூட்டிற்கான காரணம் மற்றும் தற்கொலை செய்து கொண்டது ஏன் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.