ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம் தியாகரில் உள்ள மோகன்பூர் ஜமுனியா வனப்பகுதிக்கு அருகில் பேருந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றது. அப்போது எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பாபா பைத்யநாத் தாம் கோவிலுக்கு புனித நீராட சென்ற பக்தர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் சிக்கி இருபதுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பாபா பைத்யநாத் தாம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீரை வழங்க ஷ்ரவாணி மேலாவில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு பின் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பாஜக எம் பி நிஷிகாந்த் விபத்தில் கன்வாரியா பக்தர்கள் பலியானதாக கூறியுள்ளார். இந்தப் பேருந்து விபத்து குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டதாவது, தனது மக்களவைத் தொகுதியில் தியோகர் கன்வாரியா பக்தர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதியதில் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பாபா பைத்யநாத் தாம் துயரத்தை தாங்கும் வலிமையை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.