திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருந்த அதாவது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நெல்லி தோப்பு கொடிமரம் தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் சுல்தான் சிக்கந்தர் தர்கா மற்றும் மலையில் உள்ள புது மண்டபங்கள் தவிர அனைத்து இடங்களும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்பதைக் குறித்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
தற்போது சிலர் ஆடு மாடு கோழிகளை பலியிட்டு திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். பக்ரீத் பண்டிகையை ஒட்டி நெல்லி தோப்பு பகுதியில் தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், குறிப்பிடப்பட்டிருந்தது.
இஸ்லாமிய அப்துல் ஜாபர் என்பவர் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்காக கழிவறை குடிநீர் வசதி மற்றும் மின் விளக்குகள் ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும் என மனு அளித்திருந்தார். தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அதிகாரிகள் தலையிடுதல் இருக்கக்கூடாது என தெரிவித்திருந்தார். இது போன்ற கோரிக்கைகளை கொண்ட மனு விசாரணை நீதிபதி நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி சோலை கண்ணன் மற்றும் பரமசிவம் ஆகியோர் விசாரணைக்கு அனுமதித்தனர். இந்த விவகாரத்தில் நீதிபதிகள் வெவ்வேறு உத்தரவு பிறப்பித்ததால் மூன்றாவது நீதிபதி விஜயகுமார் அமர்வு மாற்றப்பட்டது. நேற்று நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை என்பதற்கான சரியான ஆதாரம் இல்லை என்று கூறினார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை சிவன் வடிவத்தில் உள்ளதாக லண்டன் கவுன்சில் பிரிவு தெரிவித்ததால் மலைப்பகுதியில் ஆடு, மாடு மற்றும் கோழி உள்ளிட்டவைகளை பலியிட கூடாது என தெரிவித்திருந்தார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை நிலைப்பாடு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை ஜூலை 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.