Cricket : ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முக்கிய லீக் போட்டி இன்று நடைபெற உள்ளது. போட்டியில் உள்ள சிக்கல் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்த ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தற்போது எட்டு அணிகள் இரண்டு குரூப்புகளாக போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி குரூப் ஏ அட்டவணையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு தகுதி பெற்றுவிட்டது. தொடர் தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் அரையாண்டுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்நிலையில் குரூப் பி அட்டவணையில் அரையிறுதிக்கு செல்ல 3 அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான். இன்று மதியம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் தோற்கும் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இழந்து நேரடியாக வெளியேறும். வெற்றி பெற்ற அணி நேரடியாக அரை இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில் இந்த போட்டி நடைபெறும் மைதானத்தில் இன்று மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மழை பொழிந்தாலும் ஓவர்கள் குறைத்து போட்டி நடத்தப்படும் என்று கூறப்பட்டாலும். இதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி இடையே இதுபோன்று மழையின் காரணமாக போட்டு ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. இந்த போட்டியிலும் ஒருவேளை மழை பொழிந்தால் விடாமல் இருந்தால் போற்றி தடை பெறும். அவ்வாறு நடந்தால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். பிறகு ரன் ரேட் அடிப்படையில் அதிகமாக உள்ள அணி அரையிறுதிக்கு செல்லும்.





