தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பிறந்தநாள் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் வைகைப் புயல் வடிவேலு மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நகைச்சுவை கலந்த பேச்சோடு உணர்ச்சிவசமாக பேசியுள்ளார். நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆப்போசிட்டாக என் கருத்துக்களை கூறவில்லை என்று திமுக கட்சியின் மேடையில் நின்று கூறியுள்ளார். விலங்குகளை எடுத்துக்காட்டாக கூறி அது அது அதன் தாய் மொழியில் தான் பேசும். விலங்குகளுக்கே அப்படி என்றால் மனிதர்களுக்கு என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் ஐயா யாரேனும் எத்தனை மொழிகள் வேண்டுமென்றாலும் படிக்கட்டும். அது அவர்கள் இஷ்டம். ஆனால் அதை கட்டாயப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மூத்த குடிமகனாக ஸ்டாலின் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழ்த்தாய் என்னும் வெற்றி திருமகள் ஸ்டாலினை பற்றி கொண்டு இருப்பதாக எடுத்துரைத்துள்ளார். வரும் தேர்தலில் தலைவர் தலைமையில் கிட்டத்தட்ட 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் தன் உயிரை கொடுத்தாவது தாய் மொழியை காப்பேன் என்று மக்களிடத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார் என்று புகழாரம் செய்துள்ளார் வடிவேலு. டசு புசுன்னு இங்கிலீஷ்ல பேசுறத விட அழகிய தமிழில் பேசுவது தான் எங்களுக்கு முக்கியம். திருக்குறள் போன்ற அரிய பொக்கிஷங்கள் எம்மொழியில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன் உள்ள தமிழ் எங்களுக்கு மிக முக்கியம் தான் என்று பலதரப்பட்ட அவரது சொந்த கருத்துக்களை முன் வைத்துள்ளார்.





