சென்னை: வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சர் இன் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களின் வீடு தேடி சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது.
அந்த வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கு சென்று அரிசி,சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மு க ஸ்டாலின். இது குறித்து முதல்வர் பேசுகையில்,”மக்களுடைய வீடுகளுக்கே தேடிச்சென்று கொடுக்கிறது இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி ஒரு திட்டத்தை அறிவிப்பதோடு கடமை முடிந்தது என நாம நினைக்கிறது இல்ல.
அந்த திட்டத்தின் பலன், பயன் கடை கோடி மனிதனையும் சென்று சேர்ந்து பயனளிக்கும் என நினைக்கிறேன்” என்று மு க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 16,73,000 குடும்ப அட்டைகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரம் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களிலேயே குடிமை பொருட்களை பெறுவார்கள்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இதற்காக மின்னணு எடை தராசு உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களை பாதுகாப்பாக தகுதி உள்ள பயனாளர்களின் இல்லத்திற்கு சென்று நியாய விலை கடை விற்பனையாளர்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்க்கே சென்று விநியோகம் செய்வதால் அரசுக்கு 30 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவாகும் என தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.