பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் போக்குவரத்து நெரிசல் உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பெங்களூரு. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சிறுமி ஆர்யா ஐந்து வயதுடைய இவர் பிரதமர் மோடிக்கு போக்குவரத்து இருந்த ரிசல்ட் குறித்து கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை சிறுமி ஆர்யாவின் தந்தை அபிரூப் சட்டர்ஜி அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறுமி கடிதத்தில் கூறியிருந்ததாவது, “நரேந்திர மோடி ஜி” என்று தொடங்கும் அந்த கடிதத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் நாங்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. எங்களைப் போலவே வேலைகளுக்கு செல்லுவோர் அலுவலகத்திற்கு செல்லவும் தாமதமாகிறது.
தாமதமாவது மட்டுமல்லாது சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் எங்களுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஆர்யா. இந்த சிறுமியின் கடிதம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கடிதத்தை கண்ட நெடிசன்கள் பலரும் சிறுமியை இந்த செயலுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சிறுமியின் கடிதத்திற்கு பிரதமர் மோடி அலுவலக எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்து லைக் போடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. சிறுமியின் இந்த கடிதத்தை 5 லட்சத்து 96 ஆயிரம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ஒருவர் பிரதமர் மோடி சந்திப்பு கூடிய விரைவில் அமையும் என்றும், அவருடைய இந்த ஆசை நிறைவேறட்டும் என்றும் பதிவிட்டுள்ளார். சிறுமியின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.