சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வடமேற்கு வங்காள விரிகுடா ஆவிய பகுதிகளில் காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இதனால் அடுத்து 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திர பிரதேசம், தெற்கு ஒடிசா மாநிலங்களை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மழைப்பொழிவானது இயல்பை விட அதிக தென்மேற்கு பருவமழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது வங்கக்கடலில் குறைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் சென்னை உள்ளிட்ட வட தமிழாக பகுதிகளில் மழைப்பொழிவு இருக்காது என கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதன் படி கடலூர் விழுப்புரம் திருவள்ளூர் செங்கல்பட்டு சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் என சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.