சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டி நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து நகர்ந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா அருகில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களான தேனி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.