சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை!! 24 வது சுற்று பேச்சு வார்த்தையில் சீன அமைச்சர்!! 

Chinese Foreign Minister visits India
புதுடெல்லி: எல்லை விவகாரங்கள் குறித்து 24-வது சுற்று பேச்சு வார்த்தையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கலந்து கொள்கிறார். கால்வான் பகுதியில் கடந்த 2020இல் ஏற்பட்ட மோதலின் போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து  இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவு பாதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா மற்றும் சீனா இடையே இருந்த எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. சிக்கிம் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் எல்லைகள் வழியாக வர்த்தகம் தொடங்க சீனா தரப்புடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறிவித்திருந்தது.
எனினும் அரிய வகை தனிமங்கள் மற்றும் உரங்களின் விநியோகத்தை இதுவரை தொடங்காமலேயே சீனா இருந்து வருகிறது. அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜின்பிங் தலைமையிலான அரசு அரிய வகை தனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.
இதனால் போக்குவரத்து உபகரணங்கள் முதல் மின்னணுவியல் உற்பத்தி துறை வரை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 24 வது பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி எல்லை விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
இரு நாடுகளும் வர்த்தக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. சிறப்பு பிரதிநிதிகள் ஆக பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்து கொள்கிறார். பதற்றம் தணிக்க சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தருவது சிறப்பு வாய்ந்த பயணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram