பாட்னா: பீகாரில் 65 லட்சம் பேரில் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது. பீகாரில் தீவிரமாக நடைபெற்று வந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணி முடிந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அப்போது 65 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 22 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக கூறப்பட்டது.
மேலும் 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து விட்டதாக கூறி பெயர் நீக்கம் செய்தது. மேலும், முகவரியில் காணவில்லை என்றும் தகவல் அளிக்கப்பட்டது. மீதமுள்ள ஏழு லட்சம் பேர் ஒரு இடத்திற்கு மேல் மற்ற இடங்களிலும் பெயர் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டு மொத்தம் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கங்கள் ஆகிய அமைப்புகள் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது . நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்கள் மனுதாரர்கள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் சட்டப்படி தெரிவித்திருந்தது.
பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் விவரங்களை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்டுள்ளது . இது தொடர்பான அறிக்கையை 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் வலியுறுத்தி இருந்தது . மக்கள் தெளிவு பெற வேண்டுமென்று திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக இருக்க நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
ஆதார் கார்டுகள் மற்றும் EPIC நண்பர்களை செல்லுபடியாக ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தினர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதனை பொதுமக்களின் பார்வைக்காக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி 7 நாட்களுக்கு ஆதாரத்துடன் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.