பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்பு, திரிஷா ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வெற்றியடைந்த படம் தான் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்த படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிய காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு ரீரிலிஸ் செய்யப்பட்டுள்ளது. ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள சந்திரமுகி படத்திற்கு இணையாக இப்படமும் கிட்டத்தட்ட 750 நாட்களுக்கு மேலாக மல்டிபிளக்ஸ் தியேட்டரில் சாதனை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சந்தோஷ தருணத்தில் கௌதம் மேனன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இந்தக் கதையை நான் ஒரு பெரிய கதாநாயகனுக்காக எழுதினேன். ஆனால் இந்தப் படத்தின் கதை குறித்து அவரிடம் கூறும் போது இதில் துளி கூட ஆக்சன் இல்லை என்று சொல்லி நடிக்க மறுத்துவிட்டார். சிம்பு இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு அதில் நேர்த்தியாக நடித்திருந்தார். இந்த படம் எடுக்கும் சமயம் எல்லாம் எங்களுக்கு மிகவும் எதிர்பாராத டூவிஸ்ட்கள் நடைபெற்றிருந்தன. 10 வருடம் கழித்த போதே மக்கள் இன்னும் இந்த படத்தை ஞாபகத்தில் வைத்து உள்ளார்கள் என்று சந்தோசப்பட்டேன்.
இப்பொழுது 15 வருடங்களை தாண்டிய நிலையிலும் அது இந்த அளவு ஓடி சாதனை படைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்த உணர்வை வைத்து படம் எடுக்கிறேனோ, அந்த உணர்வோடு மக்களும் அப்படத்தை பார்த்து ரசிக்கிறார்கள். அந்த காரணத்தினால் தான் இன்றளவும் என்னை பார்ப்பவர்கள் ஹலோ சார் நான் கார்த்திக்! இதுதான் என் ஜெஸ்ஸி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள் என்று அவர் மகிழ்ச்சியை ஷேர் செய்துள்ளார்.





