ரயில் மறியல் போராட்டம்!! தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்!! 

Train strike!! Demand to release fishermen
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் தடைக்காலம் முடிந்த பிறகு மீனவர்கள் மீன் பிடிக்க ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உள்ளனர். 55 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அவர்களை கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்ததோடு பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் மீனவர்கள்.
பாரம்பரியம் இடங்களில் மீன் பிடிக்க இலங்கை கடற்படையினர் எந்த பிரச்சனையும் இல்லாமல் மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் படகுகளை விடுவிக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் இன்று தங்கச்சி மடத்தில் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி இன்று மாலை 3 மணி அளவில் ராஜா நகர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் ரயிலை மறித்து போராட்டம் நடத்த போவதாக மீனவர் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ ராஜமனோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram