நாக்ஷெட்: வாழ்வாதாரத்தை தேடி ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சிரியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் கடல் வழி பயணமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயணத்தின் போது ஆபத்துகள் அதிகம் இருப்பதால் உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது.
தங்களது வாழ்க்கையை தொடங்கவும் மற்றும் புதிய பொருளாதார போக்கையும் நோக்கி ப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், சிரியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேறுவது வழக்கம்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள காம்பியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். குறிப்பாக, மொரிடானியா நாட்டின் ஹிஜ்ரட் நகருக்கு அருகில் அமைந்துள்ள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. மொரிடானியா கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த கடற்படையினர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்டது. மேலும், இந்த விபத்தில் கடலில் மூழ்கி 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அகதிகள் வந்த படகு நீரில் மூழ்கியதால் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமாகிய அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.