லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டத்தை சேர்ந்த மொரார் நகரை சேர்ந்தவர் ஷீலூ என்பவர். ஜிதேந்தர் என்ற நபருடன் இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களில் ஷிலு கர்ப்பமான நிலையில் அவரை கைவிட்டு விட்டு ஜிதேந்தர் தலைமறைவாகியுள்ளார்.
தலைமறைவானதை தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் பெண் ஜிதேந்தர் தலைமறைவானது தெரிய வந்தது. எங்கு தேடியும் அவரது விவரம் குறித்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இதனால் தேடுதல் பணியை காவல்துறையினர் கைவிட்டு உள்ளனர். பெண் கணவரது வீட்டில் இருந்து வெளியேறி தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
Instagramல் வேறு ஒரு பெண்ணுடன் ரீல்ஸ் பதிவிட்டதை பெண் கண்டுபிடித்துள்ளார். உடனடியாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிர படுத்தினார். தீவிர விசாரணைக்கு பிறகு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
ஜிதேந்தர் மீது பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியது, தலைமறைவானது, முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்தது என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவரை instagram மூலம் கண்டு பிடித்ததை தொடர்ந்து அவரிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.