Cricket: ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கடைசி லீப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
2021 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. முன்னிலையில் குரூப் பி பிரிவில் தற்போது போட்டியில் நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் களமிறங்கிய தொடக்க வீரரான குர்பாஸ் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஜாடான் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்ராஹிம் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 150 க்கும் மேல் ரன்கள் அடித்து வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்த களம் இறங்கிய செடி குல்லா அடல் 85 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் தற்போது 37 ஓவர்கள் முடிந்த நிலையில், ஆப்கானிஸ்தான் 181 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கான் பேட்டர்கள் திணறி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரை அடிக்கு செல்லும் தோல்வி அடைந்தால் அரை அடி வாய்ப்பு இருந்து வெளியேறும்.