காட்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் சிறிது காலமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். “ஜென் சி” என்ற குழுவை தொடங்கியது இளைய தலைமுறை குறிக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் ஊழல் எதிர்ப்பு தெரிவிக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிகாரம் மிக்கவர்கள் மற்றும் மந்திரிகள் ஆகியோரின் வாரிசுகள் ஆடம்பரமாக எப்படி வாழ்கிறார்கள்? என்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஆடம்பரமாக வாழ்வதற்கு பணம் எங்கிருந்து வந்தது? ஊழல் மூலம் வந்ததா? என்ற கேள்வி எழுப்பி ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சாரம் நேபாள அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.
பேஸ்புக் எக்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நேபாள அரசு. இதில் ஆத்திரமடைந்த நேபாள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று முன்தினம் தலைநகர் காட்மாண்டுவில் ஒன்று திரண்டனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு உள்ளே போலீசாருக்கும் “ஜென் சி” அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தியதில் 19 பேர் பலியாகினர். மோதலால் போராட்டக்காரர்கள், போலீசார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்டது. சமூக வலைத்தள தடை ஊழல் மற்றும் 19 பேர் மரணம் போன்ற பிரச்சனைகளை முன் வைத்து போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். மேலும், உள்துறை மந்திரி ராஜினாமா செய்தால் மட்டும் போதாது, பிரதமர் கே பி ஷர்மா ஒலி பொறுப்பேற்க வேண்டும். என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். நேற்று வன்முறை வெடித்ததால் ஊரடங்கு உத்தரவு மற்றும் போலீசார் பலரை குவித்தனர்.
அவர்களையும் மீறி “கே பி திருடன் நாட்டை விட்டு வெளியேறு” என்ற கோஷமிட்டபடி பிரதமரின் சொந்த வீடு உள்ள பகத் ஊரில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பிரதமர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்து பதவி விலக வேண்டும் என கோஷமிட்டுள்ளனர். இதில் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடலின் வீடு தாக்கப்பட்டது.
காட்மாண்டுவில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட போது மாணவர்களை கொள்ளாதே என்று முழக்கமிட்டபடி சாலைகளை மரித்தும் டயர்களை தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். நேபாள காங்கிரஸை சேர்ந்த வேளாண் துறை மந்திரி ராம்நாத் சுகாதாரமற்ற மக்கள் தொகை மந்திரி பிரதீப் பவுடல் ஆகியோர் போராட்டக்காரர்களின் மீதான அடக்கு முறையை கண்டித்து ராஜினாமா செய்துள்ளனர்.
அரசியல் நிலை குறித்து விவாதிக்க மாலை 6:00 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என பிரதமர் ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் சில மணி நேரத்திலேயே பிரதமர் பதவி விலகினார். பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். போராட்டத்தால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.


