300 ரூபாய்க்கு நடந்த கொலை!! மது பிரியர்கள் அத்துமீறல்!! 2 பேர் கைது!! 

Murder committed for 300 rupees

பெங்களூரு: பெங்களூருவில் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் தொழிலாளியை கொலை செய்துள்ளனர் மது பிரியர்கள். பல்லாரி மாவட்டம் ஏபிஎம்சி போலீஸ் வளாகத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் முகமது ஆசிப். முகமது ஆசிப் என்பவரின் வீட்டிற்கு அருகில் தொழிலாளியின் தலை நசுங்கியபடி சடலம் ஒன்றினை வீசப்பட்டிருந்தது.
கடந்த ஐந்தாம் தேதி தொழிலாளி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட தொழிலாளி எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற தகவல்கள் தெரியவில்லை. கொலை சம்பவம் குறித்து ஏ பி எம் சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு பதிவின் கீழ் விசாரணையைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையின் போது தொழிலாளியை கொன்றதாக பால்ராஜ் மற்றும் அனுமந்த் ஆகிய 2 பேரை காவல்துறையினர் சந்தேகித்து கைது செய்தனர். கடந்த நான்காம் தேதியில் குடிபோதையில் இருந்த பால்ராஜ் மற்றும் அனுமந்த் ஆகிய 2 பேருக்கும் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் தொழிலாளியை மிரட்டி உள்ளனர்.
அதே பகுதியில் சுற்றித்திரிந்த அந்த தொழிலாளியை பணம் கொடுக்காததால் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு பின் அவரிடம் இருந்த 300 ரூபாய் கொள்ளை அடித்து இடத்தை விட்டு தப்பித்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட பால்ராஜ் மற்றும் அனுமந்த் ஆகியோரிடம் ஏ பி எம் சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram