வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய நடிகர்!! ராகவா லாரன்ஸ் பெருமிதம்!! 

Raghava Lawrence is proud
 சென்னை: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர் மட்டுமல்லாது சமூக சேவையும் செய்து வருகிறார். அந்த வகையில் தனது முதல் வீட்டை இலவச பள்ளியாக மாற்றி உள்ளார் ராகவா லாரன்ஸ். “பென்ஸ்”, “புல்லட்” மற்றும் “ஹண்டர்” போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாது காஞ்சனா 4 என்ற படத்தை இயக்கவும் உள்ளார். திரைத்துறையை தன் வசம் வைத்தது மட்டுமல்லாது அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்
இந்நிலையில் தற்போது தனது முதல் வீட்டை இலவச கல்வி பள்ளியாக மாற்றியுள்ளார். இதுகுறித்து வலைதள பக்கத்தில் காஞ்சனா 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த படத்திற்கு வந்த முன் பணத்தை வைத்து முதல் வீட்டை குழந்தைகளுக்கான இலவச பள்ளியாக மாற்றி உள்ளேன். உங்களில் பலருக்கு தெரியும் என்னுடைய படங்களுக்கு வரும் முன் பணத்தை வைத்து உதவிகளை செய்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு வந்த முன்பணத்தை வைத்து முதல் வேட்டை குழந்தைகளுக்கு இலவச பள்ளியாக மாற்றி உள்ளேன். முதல் வீடு என்பது எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோது தனது சேமிப்பிலிருந்து வாங்கிய முதல் வீடு என்பதால் ஸ்பெஷலானது. அதை பின்னர் அனாதை இல்லாமல் மாற்றினேன் அப்போது நாங்கள் வாடகை வீட்டில் குடியேறினோம். இப்போது என் குழந்தைகள் வளர்ந்து வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளனர்.
அதை மீண்டும் ஒரு நல்ல காரியத்திற்காக அளிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தப் பள்ளியில் நியமிக்கும் முதல் ஆசிரியர் எனது அறக்கட்டளையில் வளர்ந்த பெண் ஒருவர். இப்போது அவர் பட்டப்படிப்பை சொல்லிக் கொடுக்க தயாராக உள்ளார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு உங்களது ஆதரவும் எப்போதும் தேவை. தொடர்ந்து உங்களது ஆதரவை அளிப்பீர்கள் என நம்புகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram