திருப்பூர்: திருப்பூர் அருகே மங்கலம் கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (60 வயது) என்பவர். சம்பவத்தன்று (நேற்று முன்தினம்) கருகம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே தனது வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது ஸ்கூட்டருக்கு பின்னால் வந்த கார் ஒன்று மோதி சென்றது. அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த திமுகவை சேர்ந்த சாமலாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி என்பவர் காரில் வந்துள்ளார்.
முன்விரோதம் காரணமாக ஸ்கூட்டரின் மீது மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது. ஸ்கூட்டரில் வந்த பழனிச்சாமி உயிருக்கு போராடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் தகவல் அளிக்கப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. பரிசோதனையில் அவர் ஏற்கனவே சிகிச்சை பலன் என்று இறந்துவிட்டார் அவர்கள் கூறினார்கள். மேலும், தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசார் உயிரிழந்த பழனிச்சாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது உயிரிழந்த கருகம்பாளையம் பழனிசாமியின் குடும்பம் காவல்துறையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர். கருகம்பாளையம் பகுதியில் தார் சாலை அமைப்பது குறித்து கருகம்பாளையம் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமிக்கும் கருகம்பாளையம் பழனிச்சாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இதன் காரணமாக பேரூராட்சி தலைவர் தனது காரை வைத்து ஸ்கூட்டரை ஓட்டி வந்த கருகம்பாளையம் பழனிச்சாமி மீது ஏற்றி கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து விநாயகா பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தியதில் தார்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் முன்விரோதம் ஏற்பட்டது என்றும், அதனால் தான் கருகம்பாளையம் பழனிசாமியை கொன்று விட்டு விபத்து என நாடகம் பாடியதாகவும் கூறியுள்ளார். விசாரணை அடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பேரூராட்சி தலைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


