Cinema: சிம்புவின் 50 வது திரைப்படத்தை எடுக்க உள்ள தேசிங்கு பெரியசாமி அந்த திரைப்படத்தை குறித்து தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா துறையில் மிக முக்கிய நடிகர்களுள் ஒருவர்தான் சிலம்பரசன் இவருக்கு ரசிகர்கள் வைத்த STR என்ற பெயரும் உண்டு. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பத்து தல இந்தத் திரைப்படம் மார்ச் 30 2023 இல் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரைப்படம் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து சிலம்பரசன் நிறைய திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக எந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இந்நிலையில் சிலம்பரசன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார், அந்த வகையில் அடுத்ததாக வெளியாகும் திரைப்படம் கமல் ஜெயம் ரவி என முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கும் மணிரத்தினம் இயக்கம் THUG LIFE இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிலம்பரசன். இந்தத் திரைப்படத்தின் தொடர்ந்து நான்கு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிலம்பரசன்.
இப்படத்திற்குப் பின் STR 49 திரைப்படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார், இந்தத் திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கொரோனா குமார் இந்த திரைப்படத்தினை கோகுல் இயக்குகிறார் இத்திரைப்படம் மே 2026 ரிலீசாகும் என கூறப்படுகிறது. அடுத்ததாக STR 50 திரைப்படம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சமீபத்தில் சிலம்பரசனின் 51வது திரைப்படத்தை டிராகன் படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து இயக்கு உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எஸ் டி ஆர் 50 திரைப்படத்தை இயக்கும், தேசிங்கு பெரியசாமி இந்த திரைப்படம் கமிட் ஆவரத்துக்கு முக்கிய காரணமே யுவன் சங்கர் ராஜா தான் என்று கூறியுள்ளார். இந்தத் திரைப்படம் கைவிடப்படும் நிலையில் இருந்தது இதை யுவன் சங்கர் ராஜாவிடம் சொன்னபோது அவர் எப்போது பணியை தொடங்கலாம் என்று தான் கேட்டார் அதன் பிறகு தான் எல்லாமே மாறியது என்று அவர் கூறியுள்ளார்.