நாகை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மூன்று பைபர் படகுகளின் வந்த 12 மீனவர்களை கடல் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் மூன்று மீனவர்கள் படுகாயம் அடைந்ததோடு மீதம் உள்ளவர்களுக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் கடல் கொள்ளையர்கள் என தாக்கி வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதை பல கட்சியினர் மற்றும் அமைப்பினர் இலங்கை அரசுக்கு வற்புறுத்தியும் எந்த பலனும் அளிக்கவில்லை. இந்நிலையில் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருவது பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.


