Cricket : தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் எதிர்பாராத திருப்புமுனையாக பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 தற்போது அரை இறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இறுதி அணிகளுக்கும். ஏனெனில் இவ்விரு அணிகளில் இன்று தோற்கும் அணி எழுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறும். அதனால் இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் விளையாடி வருகிறது.
இன்று தொடங்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்கத்தில் களமிறங்கிய குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் குறைவான ரண்களில் ஆட்டம் இழந்தனர். அதுவும் குரூப் ஆஃப் ரன் ஏதும் எடுக்காமல் டக்கர் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் இருபது ரன்களை தாண்டாமல் ஆட்டத்தை இழந்து சென்ற நிலையில், செடிக்குல்லா அடல் 85 ரன்கள் விலாசினார்.
ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த நிலையில், ஆட்டம் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பக்கம் இருக்கிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அஸ்மதுல்லா ஹோமர் சாய் பேட்டிங் கலம் இறங்கினார். அவர் கடைசி நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து 63 பந்துகளை எதிர் கொண்டு 67 ரன்களை எடுத்தார். இவரின் சிறந்த ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை 273 இழக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அணி தொடக்க வீரர்கள் மேதயுவ் ஷார்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கி விளையாடி வருகிறன்றனர்.