முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை!! பிரேசிலில் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்!!

Former president jailed
பிரேசிலியா: பிரேசிலில் 2019-2022 வரை அதிபராக இருந்த ஜெயிர் பொல்சனாரோ லிபரல் கட்சியை சேர்ந்தவர். 2022 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தோல்வியை சந்தித்தார். இவருக்கு போட்டியாக தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதால் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொல்சனாரோ தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்காமல் இருந்துள்ளார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க மறுத்துள்ளார். மேலும் ஆட்சியை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டதால் ராணுவத்தின் உதவியுடன் பொல்சனாரோவின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் ஆட்சி தவிர்ப்பு சதியின் ஈடுபட்டதால் பொல்சனாரோவை கைது செய்தனர். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் 27 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது உத்தரவிட்டது. ஆட்சிக்கலைப்பு சதி திட்டத்தால் தண்டனை பெறும் பிரேசில் முதல் அதிபர் பொல்சனாரோ என கூறப்படுகிறது.
இவர் மீது சுமத்தப்பட்டுள்ள மற்ற வழக்குகள் மீதான நடவடிக்கை விசாரணை நிறைவேற்றப்படாததால் 40 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். வீட்டில் இருக்கும் பொல்சனாரோ தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதால் 60 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொல்சனாரோ குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொல்சனாரோ ஒரு சிறந்த நபர் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது என கூறியுள்ளார்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram