மோனோ ரயில் நடுவழியில் தத்தளிப்பு!! 45 நிமிடங்களுக்குப் பிறகு பயணிகள் மீட்பு!! 

Passengers rescued after 45 minutes!!
மும்பை: இன்று காலையில் மும்பையில் தண்டவாளத்தில் நடுவழியில் மோனோ ரயில் தொழில்நுட்ப கோளாறால் அந்தரத்தில் தத்தளித்தது. 45 நிமிடங்களுக்குப் பிறகு அந்தரத்தில் தவித்த மோனோ ரயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டது. காலை 7.16 மணிக்கு வடலாவின் உள்ள அன்டாப் ஹீலுக்கும், குரு தேக் பகதூர் நகர் ரயில் நிலையத்திற்கு நடுவே மோனோ ரயில் திடீரென தண்டவாளத்தில் நடுவில் நின்றது.
இந்த சம்பவம் குறித்து மும்பை காவல்துறை விசாரணை நடத்தியது. விசாரணை நடத்தியதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திடீரென தண்டவாளத்தில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நடுவழியில் நின்றதால் செய்வதறியாது திணறினர்.
45 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு சரி செய்யப்பட்டு 17 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டது. பயணிகளை வேறு 3 ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோன்று கடந்த மாதம் கனமழையால் மும்பையில் வெவ்வேறு இடங்களில் மோனோ ரயில்கள் நடுவழியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நின்றது குறிப்பிடத்தக்கது. இதில் மட்டும் நூறு பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram